Monday, June 18, 2007

சினிமாவால் நாம் லாபம் சம்பாதிப்பது எப்படி...? பகுதி -2

சினிமாவால் நாம் லாபம் சம்பாதிப்பது எப்படி...? பகுதி -2

பொதுவாகவே மில்லியனராக வேண்டும் என்றால் தினமும் இவ்வளவு சேமி; அது இத்தனை வருடத்தில் இவ்வளவு பணம் வரும் என்று சாம்பிரதாயமாக சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் நான் இங்கு சொல்லப்போவது உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம். நம்ப முடியாததாக இருக்கலாம்... ஆனால் இது உண்மையும் கூட....என் நடைமுறை வாழ்வில் கண்ட உண்மையும் கூட

மில்லியனராக வேண்டுமானால் சேமிப்பதை விட செலவு செய்... வேகமாக மில்லியனராகிவிடலாம்...

இதென்ன பைத்தியக்காரத்தனம்...? என நீங்கள் கேள்வி கேட்பது என் செவிகளில் எதிரொலிக்கின்றது.

இது உண்மையே... பணம் வேண்டுமானால் நிறைய செலவு செய்.

ஆனால்-

நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசும் பன்மடங்காகப் பெருகுவதற்கான செயல்களில் செலவு செய்யுங்கள்.

ஜீடி நாயுடு தன் மகன் கோபாலிடம் ஒரு கணிசமான பெருந்தொகை கொடுத்து, "இந்தப் பணத்தை பெருக்குக் காட்டு..." எனக் கூறிவிட்டு அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். பயணம் முடிந்து திரும்பி வந்த பொழுது மகனை அழைத்து, " பணத்தைப் பெருக்க என்னென்ன திட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டாய்...?." எனக் கேட்டார்.

மகனோ ஒரு பெருந்தொகையை அலுவலகத்தை அழகு படுத்தப் பயன்படுத்தியிருந்தார். ஜீடி நாயுடு சினமுற்றார். "இப்படி பணத்தை இப்படி முடக்காதே..." என எச்சரித்தார்.

இப்படிப்பட்ட செலவினங்கள் முதலீடாகாது.

சேமிப்பதை விட செலவு செய்....விரைவில் பணம் சேரும்...

இது எப்படி....?

சேமிக்கும் எண்ணம் ஏற்படும்பொழுது அங்கே தற்காப்பு மட்டுமே இருக்கின்றது. பாதுகாப்பிற்கான பயத்தில் மனம் முடக்கப்படுகின்றது. சேமிக்கும் பணத்தினால் வரும் வளர்ச்சி மெது மெதுவாக வரக்கூடிய ஒன்று.

ஒரு வீட்டில் ஒரு நபர் ரூ 10,000 ஒரு மாதத்திற்கு சம்பாதிப்பதற்கும், வீட்டிலுள்ள ஐந்து பேர் ஆளுக்கொரு ரூ5,000 சம்பாதிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.....?

பணம் இப்படிப் பன்முகப் பெருக்கமாய் சட்டத்திற்குட்பட்டு நியாயமாய் இருக்கவேண்டும்.


நாம் இங்கே சொல்லப்போவது நாம் சினிமா பார்ப்பதனால் நாம் எப்படி பணம் குவிக்க இயலும் என்பதே....

அது எப்படி....?

அடுத்தத் தொடர் வரும் வரை செலவு செய்யுங்கள். நிறைய செலவு செய்யுங்கள்....
செலவு செய்யும் பொழுது மறக்க வேண்டாம்
உங்களது ஒவ்வொரு காசும் பன்மடங்காகப்பெருகும் செயல்களில் செலவு செய்யுங்கள்...

தொடரும்.....

சினிமாவால் லாபம் பெறுவது எப்படி...? பகுதி-1

சினிமாவினால் நாம் லாபம் சம்பாதிப்பது எப்படி...? பகுதி-1

நண்பர்களே ஒன் மினிட் ப்ளீஸ்... எனக்காக ஒரு ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா....?.

ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்துக்கொண்டு உட்கார முடியுமா....?
இப்பொழுது வசதியாக அமர்ந்துவிட்டீர்களா....?

1. உங்களால் ஒரு வருடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எழுதுங்கள். (பார்ட் டைம் ஜாப், மாதச் சம்பளம், மற்ற இதர வருமானங்கள் எல்லாம் சேர்த்து....)

2. அந்த வருமானத்தை 12 ஆல் வகுக்கவும். ஒரு மாத வருமானம் வரும்.

3. அதை 30 ஆல் வகுக்கவும். ஒரு நாள் வருமானம் வரும்.

4. அதை 24 ஆல் வகுக்கவும் ஒரு மணி நேர வருமானம் வரும்.

5. இப்பொழுது சிவாஜிக்காக நீங்கள் செலவிடுவது 6 மணிநேரம் (3 மணி நேரம் சினிமா + சென்னை ட்ராபிக் 3 மணிநேரம் தியேட்டர் போய் வீடு திரும்ப தோராயமாக...)

6) இப்பொழுது

6 * ஒரு மணிநேர வருமானம் + போக்குவரத்து செலவு + நொறுக்குத் தீனி

= விடை....

இப்பொழுது நீங்கள் சினிமா பார்ப்பதால் நேரடியாக இழக்கும் வருமானம் இவ்வளவு.

மறைமுக வருமான இழப்பு:

கொஞ்ச காலம் அந்த சினிமா பாதிப்பில் அட்லீஸ்ட் உங்களை அந்தந்த கதாநாயகியோடு மனதால் டூயட் பாடி நேர விரயம் செய்வதால் நிகழ்காலத்திலும் வருமான இழப்பு....

அந்த சினிமாவில் வரும் சம்பவங்களை நினைத்து அசைபோடுவதால் நிகழ்காலத்தை கோட்டைவிடுவதால் ஏற்படும் வருமான இழப்பு....

நீங்கள் பார்த்த அந்த சினிமாவை ஆஹா ஓஹோ என்று மற்றவர்களிடம் சொல்வதால் அந்த சினிமாவைப் பார்க்க மற்றவர்கள் ரெடியாகின்றனர். எனவே மறைமுகமாக நீங்கள் அந்த சினிமாவின் வருமானத்தினை உயர்த்துகின்றீர்கள்.

உங்களின் வருமானத்தினை இழந்து அவர்களின் வருமானத்தினை உயர்த்துகின்றீர்கள்.

இப்படி நிறைய....இருக்கின்றன....

அப்படியென்றால் சினிமா வீணான ஒன்றா....?

இல்லை யார் சொன்னது அப்படி...?

அதையும் இன்ஸ்வெஸ்ட்மெண்ட் டாய் ஆக்கலாம். எப்படி....?

நான் சினிமாவை என் வளர்ச்சிக்கு ஒரு இன்வெஸ்ட்மெண்ட்டாய் ஆக்கியது எப்படி என்று பார்க்கலாம்...

தொடரும்.....